உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடைக்காட்டூர் சர்ச்சில் நம்பிக்கை நடை பயணம்

இடைக்காட்டூர் சர்ச்சில் நம்பிக்கை நடை பயணம்

மானாமதுரை: இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் சர்ச்சில் இயேசு பிறப்பை கொண்டாடும் வகையில் சிவகங்கை மறைமாவட்டத்தை சேர்ந்த தன்னார்வ நற்செய்தி பணியாளர்கள் முத்தனேந்தலில் இருந்து உலக நன்மைக்காக ஜெபம் செய்து நடைபயணம் மேற்கொண்டனர்.


மறை மாவட்ட ஆயர் லுார்துஆனந்தம் தலைமையில் மரக்கன்றுகள் நடுதல், கொடியேற்றம் மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.


முதன்மை குரு அருள் ஜோசப், தலைமைச் செயலாளர் மரியடெல்லஸ், பாதிரியார்கள், அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர்.


ஏற்பாடுகளை திருத்தல அருட் பணியாளர் ஜான் வசந்தகுமார், பாதிரியார்கள் பிரின்ஸ்,நிகாப், அகஸ்டின் மற்றும் இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கத்தினர், கிராம மக்கள் செய்திருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !