கோவில் திருப்பணிக்கு அரசு நிதி உதவி
ADDED :13 minutes ago
புதுச்சேரி: முதலியார்பேட்டை, ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்காக அரசு சார்பில், ரூ.15 லட்சத்திற்கான காசோலையை ஆணையர் கந்தசாமி, சம்பத் எம்.எல்.ஏ.,விடம் வழங்கினார்.
முதலியார்பேட்டை, அலர்மேல் மங்கை ஸ்ரீநிவாசப் பெருமாள் (வன்னி பெருமாள்) கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகிறது.
கோவில் திருப்பணிகாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், முதல் தவணையாக ரூ.15 லட்சம் நிதி உதவிக்கான காசோலையை ஆணையர் கந்தசாமி, கோவில் நிர்வாக கவுரவத் தலைவர் சம்பத் எம்.எல்.ஏ., நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன் ஆகியோரிடம் வழங்கினார்.
இதில், கோவில் திருப்பணி மற்றும் விழாக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.