அக்ராயபாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
                              ADDED :2 hours ago 
                            
                          
                          
கச்சிராயபாளையம்: அக்ராயபாளையம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையம் பகுதியில் உள்ள விநாயகர், சுப்ரமணியர் மற்றும் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கடந்த மாதம் 27ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து 31ம் தேதி சக்தி அழைத்தல் மற்றும் 1ம் தேதி முதல் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை 7:00 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, பஞ்சாசன பூஜை, மூல மந்திர ஹோமம், நாடி சந்தானம் மற்றும் மகா மங்கள பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:00 மணியளவில் மூலவர் விமானம் மற்றும் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.