கடலாடி ஆணிமுத்து கருப்பண்ணசாமி கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :19 hours ago
கடலாடி; கடலாடி வடக்கு வீதியில் உள்ள ஆணிமுத்து கருப்பண்ணசாமி கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு கோயில் முன்பாக விக்னேஸ்வர பூஜை, கோமாதா பூஜை உள்ளிட்ட யாக வேள்வி பூஜை நடந்தது. பின்னர் மூலவர்கள் ஆணிமுத்து கருப்பண்ணசாமி சமேத அழகிய நாயகி வள்ளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆணிமுத்து கருப்பண்ணசாமி கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.