உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2000 ஆண்டு பழமையான கோவிலில் நெயில் தெரிந்த அம்மன் முகம்; படையல் போட்டு பக்தர்கள் வழிபாடு

2000 ஆண்டு பழமையான கோவிலில் நெயில் தெரிந்த அம்மன் முகம்; படையல் போட்டு பக்தர்கள் வழிபாடு

திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கோவில்திருமாளம் கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜ மாதங்கி உடனுறை மகாகாளநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலைகளை அம்மனுக்கு அணிவித்து பூஜை செய்த பின்னர் அந்த மாலைகளில் ஒரு மாலையை அணிந்து கொண்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் அனைத்து விதமான சகலதோஷமும் தீர்க்கும் தளமாகவும் இந்த கோவில் விளங்கி வருகிறது. இவ்வாறு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ராஜமாதங்கி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நெய்குள தரிசனம் விழா வெகு விமர்சியாக நடைபெறும் அந்த வகையில் இந்த வருட ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு உலக மக்கள் நலம் பெற வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து மகாகாளநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் ராஜ மாதங்கி அம்மனுக்கு 108 லிட்டர் பால் மஞ்சள் இளநீர் சந்தனம் போன்ற சிறப்பு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு ராஜ மாதங்கி சாமிக்கு முன்பாக 15 அடி நீளம் நான்கு அடி அகலத்திற்கு வாழை இலைகளை பரப்பி வைத்து அதன் மேலே தென்னை ஓலைகளை கொண்டு மூன்று பாகமாக பிரிக்கப்பட்டு முதல் பாகத்தில் 100 கிலோ எடையில் சர்க்கரை பொங்கல் வைத்து அடுத்ததாக புளியோதரை மூன்றாவதாக தயிர் சாதம் 108 வடைகள் வைத்து சக்கரை பொங்கல் நடுவே குளம் போல் அமைத்து அதில் நெய் ஊற்றி ராஜமாதங்கி சுவாமி நெய் குளத்தில் அலங்கார ரூபத்தில் காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து படையல் செய்த சக்கரை பொங்கல் ஆகியவற்றை கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த நெய் குல தரிசன விழாவை காண்பதற்காக கோவில் திருமாலும் கிராம மக்கள் மட்டுமல்லாது மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !