சேந்தமங்கலம் அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ADDED :329 days ago
சேந்தமங்கலம்; ஐப்பசி வெள்ளிக்கிழமையையொட்டி, சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, நேற்று காலை சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன், காந்திபுரம் கருமாரியம்மன், பழையபாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் உள்ள மூலவருக்கு, பால், தயிர், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.