ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED :4748 days ago
ராமேஸ்வரம்: ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் சபாபதி சுவாமிக்கு, ஒன்பது அபிஷேகத்துடன் ஆருத்ரா தரிசனம் நடந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், டிசம்பர் 28 காலை மாணிக்கவாசகர் தங்க பல்லக்கில் புறப்பாடாகி, சபாபதி சன்னதியில் எழுந்தருளினார். 21 திருவெண்பாவை பாடல்கள் பாடிய பின், சபாபதி சுவாமி, சிவகாமசுந்தரி அம்மனுக்கு பால், பஞ்சமிர்தம், விபூதி, மாவு பொடி, மஞ்சள், இளநீர் உள்ளிட்ட ஒன்பது அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் தங்க கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். பின்னர் சபாபதி, சிவகாமசுந்தரி தங்க பல்லக்கில் வீதி உலா வந்தனர்.