ஜம்புகேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
ADDED :4666 days ago
திருப்போரூர் : செம்பாக்கம், ஜம்புகேஸ்வரர் கோவிலில், மார்கழி திருவாதிரையை முன்னிட்டு, பஞ்சமூர்த்தி புறப்பாடு டிசம்பர் 28 கோலாகலமாக நடந்தது. திருப்போரூர் அடுத்துள்ளது செம்பாக்கம். இங்கு, இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, திருவாதிரை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 28 திருவாதிரை விழாவையொட்டி நடராஜர் சிவகாமி அம்பாள், விநாயகர், மாணிக்கவாசகர், சண்முகருக்கு விசேஷ மகா அபிஷேகம் நடந்தது. பின், மலர் அலங்காரத்தில், பஞ்சமூர்த்திகளின் வீதிஉலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பஞ்சமூர்த்தி சுவாமிகளை வழிபட்டனர். கேளம்பாக்கம் அடுத்த செங்கன்மாளீஸ்வரர் கோவிலிலும், நடராஜருக்கு ஆருத்ராவையொட்டி விசேஷ அபிஷேகம் நடந்தது.