உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பம் : கார்த்திகை ராசி பலன்

கும்பம் : கார்த்திகை ராசி பலன்

அவிட்டம் 3, 4 ம் பாதம்

உழைப்பால் உயர்வடையும் உங்களுக்கு கார்த்திகை மாதம் யோகமான மாதமாகும். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியும், ஜீவனாதிபதியுமான செவ்வாய், ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும்.  பொருளாதார நிலை உயரும். சகோதரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விற்க முடியாமல் இருந்த இடத்தை விற்பீர்கள். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை சுமூகமான முடிவிற்கு வரும். சேமிப்பில் அக்கறை ஏற்படும். டிச.6 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் வருமானம் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.  கணவன், மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். வேலையின் காரணமாக வெளியூர் செல்ல வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு மாத பிற்பகுதியில் படிப்பில் அக்கறை ஏற்படும்.

சந்திராஷ்டமம்: டிச. 12

அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 18, 26, 27. டிச. 8, 9 

பரிகாரம் திருச்செந்துார் முருகனை வழிபட நன்மை உண்டாகும்.


சதயம்

பிறரால் செய்ய முடியாத வேலையையும் எளிதாக செய்து லாபம் காணும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் நன்மையான மாதம். ராசிக்குள் ராசிநாதன் சனி, யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். குழப்பம் விலகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். வரவேண்டிய பணம் வரும். புதிய முதலீடுகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அந்நியரால் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். மாதம் முழுவதும்  சப்தமாதிபதி சூரியன் ஜீவன ஸ்தானத்தில் இருப்பதால் அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட வழக்குகள் முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வு, சம்பளம் கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். சிலர் தொழிலை விரிவுபடுத்துவர். அதற்காக எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். மக்கள் ஆதரவு கூடும். மாத பிற்பகுதியில் எதிர்பாராத வாய்ப்பு தேடி வரும். தாராளமாக செலவு செய்யும் நிலை உருவாகும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு மாத பிற்பகுதி யோகமாக இருக்கும். நவ.27 வரை பாக்கிய ஸ்தான சுக்கிரனால் பிறருக்கு உதவும் அளவிற்கு உங்களின் நிலை இருக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதிய நட்பு வழியே குடும்பத்தில் குழப்பம் வர வாய்ப்புண்டு. எச்சரிக்கை அவசியம். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது நல்லது. 

சந்திராஷ்டமம்: டிச. 13

அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 22, 26. டிச. 4, 8

பரிகாரம் தில்லை காளியை வழிபட சங்கடங்கள் விலகும்.


பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்

வரப்போகும் ஒவ்வொன்றையும் முன்னதாக அறிந்து அதற்கேற்ப செயல்படும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம்.  குரு ஆறாம் இடத்தில் வக்கிரமாகி இருக்கிறார். குரு வக்கிரம் அடையும் காலத்தில் முன் ராசிக்குரிய பலன்களை தரக்கூடியவர் என்பதால், கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடி விலகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பிள்ளைகளின் மீது அக்கறை உண்டாகும். அவர்களுக்காக சேமிப்பையும் உண்டாக்குவீர்கள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு சொத்து சேரும். புதிய வீட்டில் குடியேறும் நிலை உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மாதம் முழுவதும் சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். இடமாற்றம், பதவி உயர்வுக்காக காத்திருப்போரின் விருப்பம் நிறைவேறும். வேலை தேடுவோருக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய வியாபாரம், தொழில் தொடங்க நினைத்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு கூடி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். டிச.6 முதல் லாபச் செவ்வாயும், ஜீவன புதனும், புத ஆதித்ய யோகமும் உங்கள் நிலையை உயர்த்தும். உறவுகளும், நட்புகளும் ஆச்சரியப்படும் வகையில் செல்வாக்கு உண்டாகும். தடைபட்ட ஒப்பந்தம் கைக்கு வரும். போராட்ட நிலை மாறும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடை விலகும். ஆர்வம் கூடும்.

சந்திராஷ்டமம் நவ. 17. டிச. 14

அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 26, 30. டிச. 3, 8, 12

பரிகாரம் பாலாம்பிகையை வழிபட நன்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !