சத்யசாயி பாபாவின் நூறாவது பிறந்தநாள் விழா; விளக்கு பூஜை
மேட்டுப்பாளையம்; சத்யசாயி பாபாவின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு, காரமடை வித்யா விகாஸ் பள்ளியில் திருவிளக்கு பூஜைகள் நடந்தன.
மேட்டுப்பாளையம் பகவான் ஸ்ரீ சத்யசாயி சேவா சமிதி சார்பில், சாய்பாபாவின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, காரமடை வித்யா விகாஸ் பள்ளியில் திருவிளக்கு பூஜையை நடத்தினர். காலை, 8:00 மணியிலிருந்து, 9:00 மணி வரை மெட்ரிக் பள்ளியிலும், 9:00 லிருந்து, 10:00 மணி வரை சி.பி.எஸ்.இ., பள்ளியிலும் திருவிளக்கு பூஜைகள் நடந்தன. மேட்டுப்பாளையம் என்.எஸ்.வி., விஜயா விளக்கு பூஜை துவக்கி வைத்தார். இதில் பள்ளி முதல்வர்கள் அனுராதா, விஜயலட்சுமி, ஆசிரியைகள், மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர். ஒவ்வொரு பள்ளியிலும், 108 திருவிளக்கு பூஜைகள் நடந்தன. நாளை காலை சமிதியின் சார்பில் ஆனந்தம் முதியோர் இல்லத்திலும், கல்லாறு அறிவொளி நகரிலும் பஜனையும், வஸ்திரதானம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது. மாலை, 5:00 மணிக்கு கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள சத்யசாயி சேவா சமிதியில் இருந்து ஊர்வலம் துவங்குகிறது. மாவட்ட தலைவர் வெங்கடேச நாராயணன் தலைமை வகித்து ஊர்வலத்தை துவக்கி வைக்க உள்ளார். 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சத்யசாயி பாபாவின் நூறாவது பிறந்தநாள் விழா, கோ-ஆப்ரேடிவ் காலனி சமதியிளும், அன்னபூரணிபேட்டை சமிதியிளும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் பகவான் சத்யசாயி சேவா சமிதிகளின் கன்வீனர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.