சதுரகிரியில் தரிசனம் செய்ய இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி
ADDED :3 minutes ago
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலைப்பகுதியில் மழை நின்று விட்டதால் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என வனத்துறை தெரிவித்துள்ளது. சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக சதுரகிரி மலை ஓடைகளில் அதிகளவு நீர் வரத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை முதல் மழை பெய்யாததாலும், ஓடைகளில் நீர் வரத்து குறைந்து விட்டதாலும் இன்று முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.