அய்யப்பன் கோவில் திருவிளக்கு பூஜை
ADDED :15 minutes ago
செஞ்சி: நல்லாண்பிள்ளைபெற்றாள் அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
செஞ்சி அடுத்த நல்லாண்பிள்ளைபெற்றாள் அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் மண்டல பூஜை, நான்காம் ஆண்டு வருடாபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. அதனையொட்டி, செத்தவரை சிவ ஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் இருந்து ஆபரண பெட்டி அய்யப்பன் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், மகா தீபாரா தனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.