குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் செம்பை சங்கீத உற்ஸவம்; இன்று நிறைவு
பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் செம்பை சங்கீத உற்ஸவம் நடந்தது.
குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் கார்த்திகை மாதம் ஏகாதசி உற்ஸவம் நடக்கிறது. 1976 டிச., 2ல் ஏகாதசி உற்ஸவத்தின்போது கேசவன் என்ற யானை நோய்வாய்ப்பட்டு இறந்தது. ஒவ்வொரு ஆண்டும் கேசவன் யானையின் நினைவு தினத்தன்று கோயில் யானைகள் பார்த்தசாரதி கோயிலில் இருந்து கேசவன் யானையின் படத்துடன் வீதி உலா வந்து உருவச்சிலை முன் நினைவஞ்சலி செலுத்துவது வழக்கம். நேற்று காலை 7:00 மணிக்கு யானைகள் ஊர்வலமாகச்சென்று உருவ சிலை முன் அணிவகுத்து துதிக்கை உயர்த்தி வணங்கின. யானைகளுக்கு மூலிகை சாப்பாடு, பழ வகைகள், கரும்பு, சர்க்கரை, அவல் வழங்கப்பட்டன. குருவாயூரில் இன்று (1ம் தேதி) ஏகாதசி உற்ஸவம் வெகு விமரிசையாக நடக்க உள்ளது. ஏகாதசி நோன்பு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. ஏகாதசி உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று மேல்புத்துார் கலையரங்கில் நடந்த செம்பை சங்கீத உற்ஸவத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடினர். இன்று நிறைவடைகிறது.