உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே தென்னமாதேவி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.


விக்கிரவாண்டி அடுத்த தென்னமாதேவி கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.


நேற்று காலை 8:30 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிந்து கடம் புறப்பாடாகி 9:00 மணிக்கு கோவில் கலசத்திற்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது.


யாக சாலை பூஜைகளை திருவாமாத்தூர் சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் அருணாச்சல சிவாச்சாரியார், நெட்டப்பாக்கம் கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார் ஆகியோர் செய்தனர்.


விழா ஏற்பாடுகளை மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமையில் கிராம முக்கியஸ்தர்கள் கோவிந்தராசு ஆகியோர் செய்திருந்தனர்.


தென்னமாதேவி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !