உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கூட நன்னீராட்டு விழா

திருக்கூட நன்னீராட்டு விழா

காரியாபட்டி: காரியாபட்டி சொர்ண ஐயப்பன் கோயிலில் திருக்கூட நன்னீராட்டு விழா நடந்தது. இரு கால பூஜைகளுடன் திருப்பள்ளி எழுச்சி, சுவாமிக்கு காப்பு கட்டுதல், தொடர்ந்து பூரணாகதி நடந்தது.


திருக் கூடங்கள் உலா வந்து விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு திருக்கூட நன்னீராட்டு விழா நடந்தது. கோ பூஜை, சொர்ண ஐயப்பனுக்கு கலசபிஷேகம், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !