மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
4658 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
4658 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரமடத்தில், வரும், 8 தேதி, மகாப் பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 19வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் நடைபெற உள்ளது. இந்த மஹோத்ஸவத்தையொட்டி, வரும் 5ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரை, தேனம்பாக்கத்தில் உள்ள, சிவஸ்தானத்தில் மகாருத்ரம் நடைபெறும். 7ம் தேதி பூர்ணாஹூதியும், 8ம் தேதி சங்கர மடத்தில், ஸ்ரீஏகாதச ருத்ர ஜெபம், ஹோமம், பூர்ணாஹூதி, அதிஷ்டானத்தில் அபிஷேகம் ஆகியவையும் நடைபெறும். மேலும், சாலைத் தெருவில் உள்ள, ஸ்ரீமகா ஸ்வாமி தர்ஸண மண்டபத்தில், விசேஷ அபிஷேகம், தீபாராதனை, வித்வத்ஸதஸ், வேதபாராயணம், அன்னதானம் நடைபெறும். இரவு எட்டு மணிக்கு, ஸ்ரீமகா ஸ்வாமிகளின் உருவப்படம் புஷ்ப பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு, நான்கு ராஜவீதிகளில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசங்கர பக்தஜனசபா டிரஸ்ட் செய்துள்ளது.
4658 days ago
4658 days ago