உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீப ஒளியால் ஜொலித்த பேரூர் படித்துறை நொய்யல் அன்னைக்கு மலர் துாவி வழிபாடு

தீப ஒளியால் ஜொலித்த பேரூர் படித்துறை நொய்யல் அன்னைக்கு மலர் துாவி வழிபாடு

கோவை: கார்த்திகை தீபத் திருநாளான நேற்று, பேரூர் படித்துறையை துாய்மைப்படுத்தி, தீப ஒளியேற்றி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் நொய்யலை வணங்கினர்.


கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளில் பேரூர் படித்துறையை துாய்மைப்படுத்தி, தீப ஒளியேற்றி நொய்யல் அன்னையை வணங்கிவருகின்றனர் . நேற்று காலை, குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், பேரூராட்சி பணியாளர்கள், கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் என, 80க்கும் மேற்பட்டோர் பேரூர் படித்துறையில் கிடந்த, இரண்டு டன் அளவிலான பயன்படுத்தப்பட்ட ஆடைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். மாலை 6:00 மணிக்கு தமிழ் மக்கள் கொண்டாடும் முறையில், படித்துறையில், 1,008 விளக்குகளில் தீபம் ஏற்றியும், நொய்யல் அன்னையை மலர் துாவியும் வழிபாடு செய்தனர். கோயிலுக்கு வந்த பக்தர்களும் நொய்யல் அன்னையை வழிபட்டு சென்றனர். படித்துறையில் பரத நாட்டிய நடனம் அர்ப்பணிப்பு செய்யப்பட்டது. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், சதய விழா குழுவை சேர்ந்த ஸ்ரீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !