உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கிருத்திகை தீபோத்ஸவம்; சொக்கப்பனை ஏற்றம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கிருத்திகை தீபோத்ஸவம்; சொக்கப்பனை ஏற்றம்

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள மகா நந்தி அருகில் நேற்று இரவு கிருத்திகை தீபோத்ஸவம், கார்த்திகை பௌர்ணமி யொட்டி சொக்கப்பனை ஏற்றும் சிறப்பு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக செவ்வாய் கிழமை இரவு கோயிலில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சன்னதி அருகில் சிறப்பு கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து வேதப் பண்டிதர்கள் பரணி தீபம் ஏற்றினர்.  நேற்று அதிகாலையிலேயே கோயில் வேதப் பண்டிதர்கள்  சங்கல்ப பூஜைகளை செய்தனர். 


கோயில் வளாகத்தில் உள்ள பெரிய நந்தி சிலை அருகில் சங்கல்ப பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், ஒரு பனை மரம் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. கோயிலில் இருந்து  பால தீபங்களை மேளத் தாளங்கள் மங்கள் வாத்தியங்கள் முழங்க கோயில் வேதப் பண்டிதர்கள் சுமந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சொக்கப்பனை வலம் வந்து சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இதனைக் கண்ட பக்தர்கள் பரவசமடைந்து * ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா என்றும், அரோகரா -அரோகரா என்று தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் பவித்ரமானதாகவும், அரிதானதாகவும், ஈஸ்வர பிரசாதமாகக் கருதி, (எரிந்து முடிந்த சொக்கப்பனை) பாதி எரிந்த கட்டைகளையும், சாம்பலையும் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இந்த சிறப்பு உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !