உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரமடத்தின் மடாதிபதிகளுக்கு காஞ்சியில் சிறப்பான வரவேற்பு

சங்கரமடத்தின் மடாதிபதிகளுக்கு காஞ்சியில் சிறப்பான வரவேற்பு

காஞ்சிபுரம்: திருப்பதி சங்கரமடத்தில் முகாமிட்டிருந்து, நேற்று காஞ்சிபுரம் வந்த சங்கர மடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி இருவரும் திருப்பதியில் உள்ள சங்கரமடத்தில் முகாமிட்டிருந்தனர். நேற்று காலை காஞ்சிபுரம் சர்வதீர்த்தகுளம் அருகில், சுவாமிகள் இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


பாரம்பரிய வழக்கப்படி தீர்த்த புரோகிதர் நீலகண்டசாஸ்திரிகள் தலைமையில் பூரண கும்ப மரியாதையும், தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் ஸ்தானீகர்கள் சார்பிலும் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் சங்கர மடத்தின் நுழைவுவாயிலுக்கு வந்த இரு மடாதிபதிகளுக்கும் சங்கரமடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், ஸ்ரீகாரியம் செல்லா.விஸ்வநாதசாஸ்திரி ஆகியோர் பூரண கும்ப மரியாதை வழங்கினர்.


அதை தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலிலிருந்து, ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக புனிதநீர் எடுத்து வந்த சிவாச்சாரியார்களுக்கு ஆசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், காஞ்சி காமாட்சி சங்கரமட வரவேற்புக் குழுவினரும் பங்கேற்று மடாதிபதிகளை வரவேற்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !