உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரியில் ராமர் பஜனை மடம் கோவில் கும்பாபிஷேகம்

சிங்கம்புணரியில் ராமர் பஜனை மடம் கோவில் கும்பாபிஷேகம்

சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் குலாலர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சிவசக்தி விநாயகர், ராமர் சீதா சமேத லட்சுமணன், ஆஞ்சநேயர் ராமர் பஜனை மட கும்பாபிஷேகம் நடந்தது. டிச. 6 ம் தேதி மாலை 5:30 மணிக்கு கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 10:45 மணிக்கு கோபுரம், சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாக் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிங்கம்புணரி குலாலர் உறவின்முறை, சேவுகப்பெருமாள் கோயில் அர்ச்சகர்கள், பூஜகர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !