உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயம்பேடு குறுங்காலீஸ்வர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

கோயம்பேடு குறுங்காலீஸ்வர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

கோயம்பேடு; கோயம்பேடு குறுங்காலீஸ்வர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.


கோயம்பேட்டில் பிரபலமான குறுங்காலீஸ்வர் கோவிலில், புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன. இப்பணிகள் முடிந்த நிலையில், கடந்த 4ம் தேதி விக்னேஸ்வர பிரார்த்தனையுடன், கும்பாபிஷேக நிழகச்சி துவங்கியது. கடந்த 6 ம் தேதி முதற்கால பூஜைகள் நடந்தன. இன்று காலை 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை, விக்னேஸ்வர பூஜை, 5:30 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து 6:30 மணிக்கு ராஜகோபுரம், மூலவர் விமானம் மற்றும் அனைத்து விமான கலசங்களிலும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. காலை 7:00 மணிக்கு பரிவாரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்து, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு, அறம்வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீ குறுங்காலீஸ்வர சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் வீதி உலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !