உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடுதுறை குழந்தை வேலாயுதசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

கூடுதுறை குழந்தை வேலாயுதசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

தொண்டாமுத்தூர்; தொம்பிலிபாளையம், கூடுதுறையில் உள்ள குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில், கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடந்தது.


தொம்பிலிபாளையம், கூடுதுறை, நொய்யல் ஆற்றங்கரையையொட்டி, குழந்தை வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. நேற்று காலை, கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, சர்வதேவதா ஹோமம், தீபாராதனை, தீர்த்தக்குடம் எடுத்து வருதல், தீர்த்தகுடங்கள் வழிபாடு நடந்தது. அதன்பின், மாலை, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ச்சியாக, காலை, 6:15 மணிக்கு, யாக சாலை மண்டபத்தில் இருந்து, கலசகுடங்கள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவனடியார்கள் தலைமையில், விமான கலசங்கள், குழந்தை வேலாயுதசுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வேலாயுதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !