உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் பஞ்சமி சிறப்பு பூஜை; வாராகி அம்மனுக்கு அபிஷேகம்

கோவில்களில் பஞ்சமி சிறப்பு பூஜை; வாராகி அம்மனுக்கு அபிஷேகம்

கோவை; கார்த்திகை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை, கே கே புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் இருக்கும் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதே போல் கோவை, உக்கடம் -சுண்டக்காமுத்தூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் இருக்கும் வாராகி அம்மனுக்கும் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் அம்மன் சிறப்பு தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.அதே போன்று கோவையை சுற்றியுள்ள வாராகி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !