பழநி முருகன் உற்ஸவர் சன்னதியில் வெள்ளி தகடு பதிக்கும் பணி துவக்கம்
பழநி; பழநி முருகன் கோயிலில் உற்சவர் சன்னதியில் வெள்ளித்தகடு பதிக்கும் பணியை அமைச்சர் துவங்கி வைத்தார்.
பழநி முருகன் கோயிலில் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் இன்றி வின்ச், ரோப் கார் சேவைகளில் மாற்றுத்திறனாளியின் பாதுகாவலர் ஒருவனுடன் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் துவங்கி வைத்தனர். பழநி முருகன் கோயில் உட்பிரகாரத்தில் உள்ள உற்ஸவர் சின்னகுமாரர் சன்னதியில் வேலைபாடுகளுடன் கூடிய வெள்ளி தகடு பதிக்கும் பணி மேற்கொள்வதை அமைச்சர்கள் துவங்கி வைத்தனர். இதற்கு 189.218 கிலோ கிராம் வெள்ளி பயன்படுத்தப்பட உள்ளது. தற்போதைய இதன் மதிப்பு ரூ.4 கோடி மூலம் பழநி முருகன் கோயிலில் உள்ள ராஜகோபுரத்தில் ரூ.30 லட்சம் செலவீட்டில் வண்ண மின்விளக்குகளை ஒளிர செய்து துவங்கி வைத்தனர். மாலையில் ஹிந்து அறநிலை துறை சார்பில் 200 நபர்கள் 70க்கு வயதுக்கு மேற்பட்டோர் இலவசமாக பயணிக்கும் அறுபடை பயணத்தை அமைச்சர் சேகர்பாபு துவங்கி வைத்தார்.