வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலில் புதிய கொடி மரம் கும்பாபிஷேகம்
ADDED :17 minutes ago
சென்னை: வேளச்சேரி கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரர் கோவிலில், புதிய கொடி மரம், 18 லட்சம் ரூபாயில், உபயதாரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது. அதை முன்னிட்டு, கடந்த 5ம் தேதி முதல் யாகசாலை வளர்க்கப்பட்டு, ஹோமங்கள், பூர்ணாஹுதி நடத்தப்பட்டன. கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7:00 மணிக்கு, மூன்றாம் கால யாகசாலை பூஜை துவங்கின. காலை 9:15 மணிக்கு கலச புறப்பாடு நடந்து, கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.