உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபத்துாணில் தீபம் ஏற்றக்கோரி குன்றத்தில் வீட்டு வாசலில் விளக்கேற்றி வேண்டுதல்

தீபத்துாணில் தீபம் ஏற்றக்கோரி குன்றத்தில் வீட்டு வாசலில் விளக்கேற்றி வேண்டுதல்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி மலையை சுற்றி உள்ள கிராம மக்கள் வீடுகளில் மஞ்சள் நிறத்தில் முருகன் கொடி, விளக்கேற்றி கூட்டு பிரார்த்தனை செய்தனர்.


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் தீப துாணில் தீபம் ஏற்ற அரசு, ஹிந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில், திருப்பரங்குன்றம் பாம்பன் நகர், கருமாரியம்மன் கோவில் தெரு, சக்தி விநாயகர் கோவில் தெரு, பாலாஜி தெரு, வெள்ளி மலை தெரு, ராஜீவ் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன் முருகன் படத்துடன் கூடிய சேவற் கொடியை கட்டி, விளக்குகளில் தீபம் ஏற்றி பெண்கள் கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !