உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை விழா; திருக்கல்யாணம்

வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை விழா; திருக்கல்யாணம்

ராஜபாளையம்: ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.  டிச.7ல் தொடங்கி காலை, மாலை லட்சார்ச்சனையை தொடர்ந்து அபிஷேகம் அலங்காரம் நடந்தது. நேற்று காலை திருக்கல்யாணத்தை முன்னிட்டு வேட்டை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்து பூஜைகளில் கலந்து கொண்டனர். வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது வேட்டை வெங்கடேச பெருமாள் பத்மாவதி தாயார் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !