கார்த்திகை கடைசி சனி: அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :7 hours ago
கோவை: கார்த்திகை மாதம் கடைசிசனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள மூலவர் வெங்கடேச பெருமாள் மற்றும் உற்சவமூர்த்திக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் மூலவர் ஸ்ரீதேவி -பூதேவி சமேதராய் துளசி மாலை மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.