கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :295 days ago
கோவை; கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவை, உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.