வடமதுரையில் சித்திரை விழா: மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்
ADDED :1 days ago
வடமதுரை: வடமதுரையில் சித்திரை விழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருமண பட்டு ஆடைகள் உடுத்தி திருமண பந்தலில் யாகசாலை அமைத்து விக்னேஸ்வர, கணபதி பூஜைகள் நடந்தன. பெண் பக்தர்கள் சார்பாக பல்வேறு திருமண சீர்வரிசைகள் தட்டுக்களில் கொண்டு வரப்பட்டு சபையில் வைக்கப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க திருப்பூட்டுதல் என்ற திருக்கல்யாணம் வைபவத்தை தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் தரிசனம் செய்தனர். சுமங்கலிகள் தங்களது கழுத்தில் புதிய திருமாங்கல்யம் கட்டிக் கொண்டனர். அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.