திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மிளகாய் அரைத்து வழிபாடு
ADDED :50 minutes ago
பொள்ளாச்சி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், தி.மு.க., அரசு அமல்படுத்தவில்லை. தீர்ப்பை அமல்படுத்தக்கோரி, ‘ஹிந்து மக்கள் கட்சி தமிழகம்’ மாநில அமைப்பு செயலர் கணேஷ்பாபு, மாநில செயலர் ரமணன் ஆகியோர், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், மிளகாய் அரைத்து, அம்மனிடம் முறையீட்டு வழிபாடு நடத்தினர்.