சபரிமலை யாத்திரை தென்காசியில் துவக்கம்!
ADDED :4663 days ago
தென்காசி: தென்காசியில் இருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் யாத்திரை துவக்கினர். தென்காசி ஓம் சக்தி சபரி யாத்திரை குழுவினர் ஆண்டு தோறும் சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இக்குழுவின் 36ம் ஆண்டு சபரிமலை யாத்திரை நேற்று துவங்கியது. தென்காசி விஸ்வகர்ம சமுதாய நலக்கூடம் அக்கசாலை விநாயகர் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி யாத்திரை துவக்கினர். யாத்திரை குழுவின் நிர்வாகிகள் டி.எம்.தங்கவேல்சாமி, பி.தங்கவேல்சாமி தலைமையில் திரளான ஐயப்ப பக்தர்கள் யாத்திரையில் கலந்து கொண்டனர்.