சாமியார் மலையில் சிறப்பு பூஜை
ADDED :4769 days ago
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரங்கோட்டை சாமியார் மலையில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான மக்கள் பங்கேற்றனர்.பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடியில் அமைந்துள்ள சேரங்கோட்டை சாமியார் மலையில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பூஜைகளை ஆசிரம சுவாமிகள் ஓம்காரணந்த கீர்த்தா, பரமசிவம் குருக்கள் நடத்தினர். தொடர்ந்து, மதியம் 1:00 மணிக்கு நடந்த அன்னதான நிகழ்ச்சியை, எம்.எல்.ஏ. திராவிடமணி துவக்கி வைத்தார். பூஜைக்கு ஆசிரம கமிட்டி தலைவர் கோபி தலைமை வகித்தார். செயலாளர் விஜயகுமார், விழாக்குழு நிர்வாகிகள் லிங்கராஜ், சிவஞானம், நித்யானந்தன், குமரேசன் முன்னிலை வகித்தனர். இதில், உள்ளூர் மக்கள் திரளாக பங்கேற்றனர்.