ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் மார்கழி வழிபாடு; திருப்பாவை பட்டில் ஆண்டாள்
ADDED :6 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத பிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு இன்று காலை 10:00 மணிக்கு வெள்ளிக்குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அப்போது ஆண்டாளுக்கு திருப்பாவை பட்டு சாற்றி சிறப்பு பூஜைகளை சதீஷ் பட்டர் செய்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட பக்தர்களும், புதுமண தம்பதிகளும் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள், செய்திருந்தனர். இன்று முதல் தினமும் அதிகாலை 4:15 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.