உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துக்குமாரசுவாமி கோவிலில் இரண்டாம் ஆண்டு விழா

முத்துக்குமாரசுவாமி கோவிலில் இரண்டாம் ஆண்டு விழா

பல்லடம்; மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், இரண்டாம் ஆண்டு விழா விமரிசியாக நடந்தது.


பல்லடத்தை அடுத்த, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், இரண்டாம் ஆண்டு விழா, டிச., 14 அன்று துவங்கியது. காலை, 9.00 மணிக்கு மகா வேள்வி, அபிஷேகம் மற்றும் மூலவ மூர்த்திகளுக்கு சங்காபிஷேகம் ஆகியவை நடந்தன. மறுநாள், காலை, 9.15 மணிக்கு புதிதாக அமைக்கப்பட்ட கொடி மரத்துக்கு பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களால் கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு வேள்வி வழிபாடுகளைத் தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மூலவர் முத்துக்குமார சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !