கணக்கன்குப்பம் புதுப்பிள்ளையார் கோயில் மகா கும்பாபிஷேகம்
செஞ்சி; கணக்கன் குப்பம் புதுப்பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
செஞ்சி அடுத்த கணக்கன்குப்பம் கிராமத்தில் புதிதாக கட்டியுள்ள புதுப்பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 13ஆம் தேதி காலை 8 மணிக்கு மகாலட்சுமி நவகிரக ஹோமம் தன பூஜை நடந்தது காலை 11 மணிக்கு சாமிகளுக்கு எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகமும், உபச்சாரங்களும் நடந்தன. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், இரண்டாம் கால வேதிகார்ச்சனை, வேத பாராயணம், தம்பதி பூஜை, பிம்ப சுத்தி, ரக்ஷா பந்தன், நாடி சந்தானம், மகாபூர்ணஹுதி, யாத்ராதானம் நடந்தது. 9.30மணிக்கு கடம் புறப்பாடும், 9.50 மணிக்கு விமான கலசத்தில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 10 10 மணிக்கு மூலவர் புது மாப்பிள்ளை விநாயகருக்கு கலசாபிஷேம் மற்றும் மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.