காளஹஸ்தி சிவன் கோயிலில் ரஷ்ய நாட்டு பக்தர்கள்; பூஜை செய்து வழிபாடு
ADDED :2 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ( செவ்வாய் கிழமை) ரஷ்யா நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் கோவிலில் நடைபெறும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோயிலுக்குள் சென்றவர்கள் ஞான பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்திஷ்வரரை சிறப்பு தரிசனம் செய்தனர். கோயிலுக்குள் உள்ள சிற்பங்களை கண்டு வியந்த ரஷ்ய பக்தர்கள், மேலும் கோயிலின் தல வரலாறு குறித்து கோயில் ஊழியர்களிடமும், அதிகாரிகளிடமும் கேட்டறிந்தனர்.