உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா

திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெற்றது. 


திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மா தம் சுவாதி நட்சத்திரத்தில் உற்சவர் பெருமான் தீர்த்த குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி நேற்று மாலை 6:00 மணிக்கு தெ ப்பத்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி திருக்குளத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !