மலையாண்டவர் கோவிலில் உற்சவர் சிலை பிரதிஷ்டை வழிபாடு
ADDED :1 days ago
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் குழந்தை சுவாமி சித்தரின் உற்சவர் கற்சிலை பிரதிஷ்டை வழிபாடு நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பாலசித்தர் ஸ்ரீகுழந்தை சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது. குழந்தை சுவாமிகளின், 140 வது அவதார தினத்தை முன்னிட்டு, சுவாமியின் உற்சவர் கற்சிலை பிரதிஷ்டை வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு காலை 11:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சித்தருக்கு கலச அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு குழந்தை சுவாமி சித்திரை வழிபட்டனர்.