உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் ஜெயந்தி; கோவை கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.. பக்தர்கள் குவிந்தனர்

அனுமன் ஜெயந்தி; கோவை கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.. பக்தர்கள் குவிந்தனர்

கோவை; மேட்டுப்பாளையம் சாலை தொப்பம்பட்டி பிரிவு ஜெங்கமம நாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ள (நவாம்ஸ) அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று ஆஞ்சநேயர் விஸ்வரூப ராஜ மாருதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


கோவை மேட்டுப்பாளையம் சாலை தொப்பம்பட்டி பிரிவு ஜெங்கமம நாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ள (நவாம்ஸ) அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு% இன்று ஆஞ்சநேயர் விஸ்வரூப ராஜ மாருதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். துடியலூர் ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த அஞ்சனை மைந்தனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவை பீளமேடு அஷ்டாம்ச ஆஞ்சநேயர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் குவிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !