உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் ஜெயந்தி; கோவில்களில் சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தி; கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோவை; கார்த்திகை மாதத்தில் வரும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவையின் பல்வேறு இடங்களில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதில் கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவில்,கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர்,ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவில்,மேட்டுப்பாளையம் ரோடு துடியலூர் வீர ஆஞ்சநேயர்,ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரிலுள்ள ஆஞ்சநேயர்,குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் ஆஞ்சநேயர் மற்றும் கோவையை சுற்றியுள்ள உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஆஞ்சநேயர். இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !