உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் பகுதியில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்

பெரியகுளம் பகுதியில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்

பெரியகுளம்; பெரியகுளம் பகுதியில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் மார்கழி அமாவாசை, அனுமன் ஜெயந்தி விழா மங்கள இசையுடன் கோலாகலமாக துவங்கியது. அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். உற்ஸவர் நரசிம்மர் அலங்காரத்திலும், லட்சுமி தாயாருடனும், மற்றொருவர் சாந்த சொரூபனாக ராம பக்த ஆஞ்சநேயர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். பக்தர்களுக்கு துளசி, தீர்த்தம், லட்டு, சர்க்கரை பொங்கல் பிரசாதம்வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அர்ச்சகர் லட்சுமணன் செய்திருந்தார். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ஐஸ்வர்யம் ஆஞ்சநேயர், வரதராஜப் பெருமாள் கோயிலில் வீர ஆஞ்சநேயர், லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !