மானாமதுரை, இளையான்குடியில் அனுமன் ஜெயந்தி விழா
மானாமதுரை; மானாமதுரை இளையான்குடியில் உள்ள அனுமன் கோயில்களில் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை வீர அழகர் கோயிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிகாலை பால், பன்னீர்,சந்தனம், இளநீர்,தயிர்,வெண்ணெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு வடை மாலை சாத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றன உற்சவர் வீர ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் அலங்காரத்துடன் கோயில் முன் மண்டபத்தில் எழுந்தருளினார்.விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல மானாமதுரையில் உள்ள தியாக வினோத பெருமாள்,அப்பன் பெருமாள், ஆற்றுப்பாலம் இறக்கத்தில் உள்ள ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில், சுந்தரபுரம் விநாயகர்,பிருந்தாவன அக்ரஹார தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் மற்றும் இளையான்குடியில் உள்ள கோயில்களில்களிலும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றன.