வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்கபெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED :4 hours ago
கோபால்பட்டி,கோபால்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்கபெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக வி.மேட்டுப்பட்டி ஆஞ்சநேயருக்கு 16 வகை அபிஷேகம், பஞ்ச சுக்த, மகா சுதர்சன, சகஸ்ரநாம ஹோமங்கள், மூலவருக்கு பாலாபிஷேகம், புஷ்பாஞ்சலி நடந்தது. ராஜ அலங்காரத்துடன், விசேஷ பூஜைகள் நடந்தது. உற்ஸவர் கதிர் நரசிங்க பெருமாள் சமேத சீதேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்துடன், அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வட மாலை சாற்றி பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், நெய்வேத்தியம் செய்யப்பட்டது.பக்தர்கள் சுவாமிக்கு துளசி,வெற்றிலை, வடை மாலை சாற்றி வழிபட்டனர். இதைப்போலவே நத்தம் கோவில்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.