ஆண்டிபட்டியில் அனுமன் ஜெயந்தி விழா
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி பகுதியில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
ஜம்பலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் யாக சாலை பூஜைகளுடன் துவங்கியது. ஆஞ்சநேயர் சுவாமிக்கு 11 வகை அபிஷேகம் வடை மாலை சாத்தி வழிபட்டனர். பூரண கும்பத்துடன் ஆஞ்சநேயர் சுவாமி கோயில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோயிலில் நடந்த அன்னதானத்தை ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுதா தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர். சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட பலவகை அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டிபட்டி மேற்கு ஓடை தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் சுவாமிக்கு 21 வகையான அபிஷேகம் பூஜைகள் நடந்தது. வெள்ளிக்கவசம் அணிந்த ஆஞ்சநேயர் சுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு துளசி, செந்தூரம், இனிப்பு வகைகள், வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா குழு சார்பில் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.