திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் கிழக்கு வீதி மற்றும் என்.ஜி.ஜி.ஓ., நகர் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு யாகசாலை பூஜை, சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை வெண்ணை காப்பு அலங்காரத்தில் அர்ச்சனை, நாமசங்கீர்த்தனம், மகா தீபாராதனை நடந்தது. கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் காலை 11:00 மணிக்கு சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு வெண்ணைகாப்பு அலங்காரத்தில் அர்ச்சனை, லட்ச தீபம் ஏற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகளின் உபன்யாசம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை சத்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.