கூடலழகிய பெருமாள் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED :1 hours ago
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இக்கோயிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை தினந்தோறும் அதிகாலையில் நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று மாலை கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் கொண்டு வந்த நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய்தூள், பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.