உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அரியநாச்சி தீர்த்தத்தில் மகாதீபாராதனை

ராமேஸ்வரம் அரியநாச்சி தீர்த்தத்தில் மகாதீபாராதனை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அரியநாச்சி தீர்த்த குளத்தை விவேகானந்தா கேந்திரம் சார்பில் புனரமைத்து நேற்று மகா தீபாராதனை நடந்தது.


ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய அரியநாச்சி தீர்த்த குளம் ராமேஸ்வரம் எஸ்.கே.பட்டி கிராமம் அருகே உள்ளது. பல ஆண்டுகளாக தீர்த்த குளத்தை பக்தர்கள் பயன்படுத்தாமல் புதைந்து போன நிலையில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் புனரமைக்கப்பட்டு மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.


இந்த தீர்த்தத்தில் நீராடினால் வேத ஞானம், விவேகம் பெற்று வாழ்வில் முன்னேறுவார்கள் என்பது ஐதீகம். புதுப்பித்த தீர்த்த குளத்தில் நேற்று பசுமை ராமேஸ்வரம் அமைப்பு சார்பில் மகா தீபாராதனை பூஜை நடந்தது. இதில் பசுமை ராமேஸ்வரம் அமைப்பு நிர்வாகி சரஸ்வதியம்மா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !