உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனதினை ஒருமுகப்படுத்துவதும் செம்மைப்படுத்துவதும் கலைகள்

மனதினை ஒருமுகப்படுத்துவதும் செம்மைப்படுத்துவதும் கலைகள்

கோவை: கலா சங்கம் குளோபல் துவக்க விழா, கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.


நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் சஞ்சீவனி சுகாதாரப் பராமரிப்பு அறக்கட்டளை சார்பில் கலை விழா நடந்தது. நடன கலைஞர் சர்வேஷனின் பரதநாட்டியம், இசைக்கலைஞர் அரவிந்த் குமார் ஆசாத்தின் தபலா, ருத்ரா சங்கரின் கதக், மோஹித் சஹானியின் ஹார்மோனியம், சந்தனா தல்லுாரியின் குச்சிப்புடி நடனம், உன்னதி அஜ்மேராவின் மோகினியாட்டம், லீலா நடனக்குழுவினரின் நாட்டுப்புற நடனம், பத்மஸ்ரீ லியானா சித்தரஸ்தியின் ஒடிசி நடனம் ஆகியன, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன் பேசுகையில், ‘‘பல வியாதிகளுக்கு காரணம் மனது. மனதை ஒருமுகப்படுத்துவதும், செம்மைப்படுத்துவதும் கலைகள்தான்,’’ என்றார். கலா சங்கம் குளோபல் நிறுவனர்கள் ஸ்ரீபதி மற்றும் கீதா, கோவை சங்கர் அண்ட் அசோசியேட்ஸ் நிறுவனர் ரமணி சங்கர், தி கோயம்புத்துார் கிட்னி சென்டர் நிறுவனர் டாக்டர் ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !