உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழர் கால நில அளவுகோல் உடுமலை அருகே கண்டெடுப்பு

சோழர் கால நில அளவுகோல் உடுமலை அருகே கண்டெடுப்பு

உடுமலை: உடுமலை அருகே சோழர் கால நில அளவுகோல் கண்டெடுக்கப்பட்டது.


திருப்பூர் மாவட்டம், குமரலிங்கம் அமராவதி ஆற்றுப்படுகையில், கி.பி., 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கரியபிரான் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி,கொங்குச்சோழர் ஆட்சியில் நிலங்களை அளக்க பயன்படுத்தப்பட்ட நில அளவு கோலை கண்டெடுத்தார். அவர் கூறியதாவது: கரியபிரான் பெருமாள் கோவில் தென்பகுதி படுகையில், நிரந்தர அளவுகோல் பொறிக்கப்பட்டுள்ளது. அளவுகோலின் மொத்த நீளம், தற்கால அளவில் 446 செ.மீ., இந்த மொத்த நீளத்தின் சரிபாதி நடுப்பகுதியான, 223 செ.மீ.,ல் ஒரு 6×6 செ.மீ., அளவுள்ள குறி பொறிக்கப்பட்டுள்ளது. இது, அளவுகோலின் அமைப்பு. கோவிலுக்குக் கொடை அளிக்கப்படும் நிலங்கள் மற்றும் ஆட்சி பகுதியில் உள்ள எல்லை- பரப்பு பிரச்னை நிலங்கள் ஆகியவற்றை சுமுகமான முறையில் அளக்க, கோவில்களில் நிரந்தரமாக பொறிக்கப் பட்ட இந்த நில அளவுகோல்கள் உதவியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !